விக்ரம்’ படத்தை இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (06:31 IST)
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது
 
கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் மூன்றாம் தேதி திரைக்கு வர உள்ளது 
 
இதனையடுத்து இந்த  சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை கோரி தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் 
 
விசாரணையில் பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளதால் இணையத்தில் வெளியானதால் பெரும் இழப்பு ஏற்படும் என்று வழக்கறிஞர் கூறினார் இதனால் சட்டவிரோத வெளியீட்டுக்கு தடை வேண்டும் என்று கூறினார் 
 
இதை ஏற்ற நீதிபதி சரவணன் படத்தை இணையத்தில் வெளியிட தடை விதித்தார். மேலும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டார் விசாரணை ஜூலை 1-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்