அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

Prasanth Karthick

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (15:00 IST)

நேற்று வெளியான அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ட்ரெய்லர் அதிகமான பார்வைகளை பெற்று லியோவின் சாதனையை முறியடித்துள்ளது.

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது. நீண்ட காலம் கழித்து அஜித்தின் ஒரு முழுமையான ஆக்‌ஷன் படம் வர உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

 

ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. முழுவதும் ஆக்‌ஷன் அதிரடியாக இருந்த அந்த ட்ரெய்லர் பெரும் வைரலான நிலையில் படத்திற்கான முன்பதிவிற்காக ரசிகர்கள் ஆர்வமாய் காத்திருக்கின்றனர். 

 

மேலும் ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 3.20 கோடி பார்வைகளை பெற்றுள்ளது. தமிழ் திரைப்படங்களில் வெளியாகி 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கொண்ட ட்ரெய்லராக இது உள்ளது. முன்னதாக லியோ ட்ரெய்லர் 3.10 கோடி பார்வைகளை பெற்றிருந்த சாதனையை குட் பேட் அக்லி முறியடித்துள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்