தெலுங்கில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் விக்ரம்… ராஜ்கமல் வெளியிட்ட அறிவிப்பு!

வியாழன், 26 மே 2022 (12:50 IST)
விக்ரம் திரைப்படம் தெலுங்கில் விக்ரம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் வெளியாக உள்ளது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. தெலுங்கு டப்பிங் வெர்ஷனுக்கு ‘விக்ரம் ஹிட்லிஸ்ட்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் டீசர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் விநியோக உரிமையை ஸ்ரேஷ்த் நிறுவனம் சார்பாக சுதாரகா ரெட்டி வெளியிடுகிறார். இந்நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சுமார் 400க்கும் மேற்பட்ட திரைகளில் இந்த படம் வெளியாக உள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

#VikramHitlist Telugu to be released in 400+ theatres across AP and Telangana
#KamalHaasan #VikramFromJune3 #VikramHitlist @ikamalhaasan #SudhakraReddy @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @actor_nithiin @SreshthMovies @RKFI @turmericmediaTM pic.twitter.com/GZ5iIQuUAX

— Raaj Kamal Films International (@RKFI) May 26, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்