மாஸ்டர் JD vibe-ல விக்ரம் ‘கமல்’… பிரபல இயக்குனரின் வைரல் பதிவு!

வியாழன், 26 மே 2022 (14:00 IST)
விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து நேற்று படத்தின் சென்ஸார் தகவலோடு புதிய போஸ்டர் வெளியானது.

அந்த போஸ்டரில் கமல் சோகமாக அமர்ந்திருக்க, அருகில் மது பாட்டில்கள் இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற, இயக்குனர் லோகேஷின் நெருங்கிய நண்பரான ரத்னகுமார் ’மாஸ்டர் ஜே டி vibes’ என அந்த போஸ்டரை கேப்ஷன் இட்டு பகிர்ந்துள்ளார். ரத்னகுமார் மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தின் திரைக்கதை குழுவில் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்