ஒன்றியம் என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கு! – கமல் சொன்ன அடடே விளக்கம்!

வியாழன், 26 மே 2022 (13:18 IST)
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் பாடலில் ஒன்றியம் என்ற வார்த்தை வருவது குறித்த சர்ச்சைக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். ஜூன் 3ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியானது.

கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தல.. பத்தல..” பாடல் பெரும் ஹிட் ஆகியுள்ளது. ஆனால் அதே சமயம் அதில் ஒன்றியம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது அரசியல் பகடியா என்ற சர்ச்சைகளும் எழுந்தன.

இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் ஒன்றியம் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன, பத்திரிக்கையாளர் ஒன்றுணைந்து இருப்பது ஒரு ஒன்றியம்தான். இயக்குனர்கள் சேர்ந்து ஒரு யூனியன் வைத்திருக்கிறார்கள். அதுவும் ஒரு ஒன்றியம்தான். இங்கெல்லாம் தவறு நடந்தால் என்ன நடக்குமோ அதுபோல்தான் அந்த பாட்டில் சொல்லப்பட்டுள்ளது” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்