அப்போது படம் பற்றி பேசிய கமல் நான் பழைய விக்ரம் படத்தின் போது ஒரு லைன் கூறினேன். அது ரொம்ப அட்வான்ஸாக இருப்பதாக இயக்குனர் ராஜசேகர் உள்ளிட்ட பலரும் பயந்தார்கள். ஆனால் சுஜாதா மட்டும் அதை ரசித்தார். அந்த லைனை இப்போது லோகேஷிடம் கூறினேன். அவர் அதைக் கேட்டு உடனடியாக பிடித்திருக்கிறது எனக் கூறி அதை திரைக்கதையாக்கி விக்ரம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்” என்று கூறியுள்ளார்.