சிரஞ்சீவி ரசிகர்களின் பிரம்மாண்டமான அன்பு… 126 அடியில் கட் அவுட்!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (07:01 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் முதல் இன்னிங்ஸ் போல இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமையவில்லை. இதனால் தொடர்ந்து வெற்றி பெற்ற படங்களின் ரீமேக்குகளில் நடிக்கிறார்.

அந்த வகையில் அஜித் நடித்த வேதாளம் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவரின் தங்கை வேடத்தில் நடிக்கிறார். படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாகும் நிலையில் இப்போது படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் சிரஞ்சீவி ரசிகர்கள் இதுவரை தெலுங்கு சினிமாவில் யாருக்குமே வைக்காத அளவுக்கு 126 அடியில் பிரம்மாண்டமான கட் அவுட் வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஹைதராபாத் - விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சூர்யாபேட்டில் உள்ள உணவகத்தில் இப்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்