நெட்பிளிக்ஸ் டிரண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ‘மாமன்னன்’!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (06:56 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழுவினரே அறிவித்துள்ளனர். இந்த படத்தில் வடிவேலு நடித்திருந்த மாமன்னன் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து இப்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெளியான சில நாட்களிலேயே நெட்ஃபிளிக்ஸ் ட்ரண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

இதை படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். திரையரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாமன்னன் இப்போது ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்