சென்னை திரும்பிய அஜித்… அடுத்த கட்டத்தில் விடாமுயற்சி பணிகள்!

வியாழன், 27 ஜூலை 2023 (07:31 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில் இப்போது படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்துள்ள நிலையில் ஷூட்டிங் தொடங்கும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக ஐதராபாத்தில் தற்போது அரங்கு அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள அஜித் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் இப்போது விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட பணிகளை இயக்குனர் மகிழ் திருமேனி தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கன நட்சத்திர தேர்வு பட்டியலை அவர் முடித்து லைகா தரப்பின் முடிவுக்காக அனுப்பியுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்