விளம்பரமின்றி இசைக் கலைஞர்களுக்கு உதவிய பிரபலங்கள்!

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (12:54 IST)
தென்னிந்திய இசையமைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் சங்கம் சென்னையில் உள்ளது.இதன் தலைவராக இசையமைப்பாளர் தினா உள்ளார்.இதில் 1250 கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக இசைக் கலைஞர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற நிலையில் இசை அமைப்பாளர்கள் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.

இதுவரை இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். டி.இமான் , அனிருத் தலா ரூ.3 லட்சம் வழங்கியுள்ளனர்.

எனவே, இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு கொரொனா நிதியாக 28 லட்சத்து 20 ஆயிரம் சேர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும் இசைக்கலைஞர்களுக்கு  இசையமைப்பாளர்கள் வழங்கிய தொகையை ரூ.2000  வீதம் பிரித்துக் கொடுத்துள்ளதாகவும், கொரொனா பாதிப்பால் இவ்வாண்டு சந்தா தொகையை செலுத்த வேண்டாம் எனவும்  முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்