’மாஸ்டர்’ படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள்: டிராக்லிஸ்டில் ஆச்சரியம்
ஞாயிறு, 15 மார்ச் 2020 (15:14 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் ஆறு பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இருப்பதாகவும் இரண்டு பாடல்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதாகவும் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனிருத்தையும் சேர்த்து இந்த படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது