இன்னொரு வாட்டி சோம்பேறின்னு சொன்னீன்னா அவளோ தாண்டா - ரணகளமான பிக்பாஸ் வீடு!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (13:33 IST)
பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் ப்ரோமோவே ரணகளமாக வெடித்துள்ளது. ஆரி மற்றும் பாலாஜிக்கு இடையில் வாக்குவாதம் முற்றி இருவரும் பயங்கரமாக சண்டையிட்டு கொண்டனர். ஆரி பாலாவை பார்த்து வீட்டில் குப்பைகளை கூட்ட மாட்டேங்குறான் என சோம்பேறி என்று கூறிவிட்டார். 
 
அவ்ளோவ் தான்... சந்திரமுகியாக மாறிய பாலாவை பார்க்கணுமே.... கூட்ட முடியாது. இன்னொரு வாட்டி சோம்பேறின்னு சொன்னீன்னா அவ்ளோவ் தாண்டா உனக்கு என கடுமையாக திட்டி கோபப்பட்டுள்ளார். ஏற்கனவே பாலா அடாவடி , அராஜகம் வீட்டில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இடையில் அவரது நண்பர் வேறு வந்து உசுப்பேத்தி விட்டுட்டு போய்விட்டார். 
 
இருக்கட்டும் இதுவும் நல்லதுக்காகவே தான். இப்போ தான் ஆரியின் நல்ல குணம் எல்லோருக்கும் தெரியவரும்.  அவர் டைட்டில் கார்ட் வெல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளது. என்ன நடந்தாலும் அது ஆரிக்கு சாதகமாகவே நடக்கட்டும் என ஆடியன்ஸ் ஆறுதல் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்