பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களை பார்க்க அவர்களது குடும்ப உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். அந்தவகையில் ஷிவானியின் அம்மா , பாலாஜியின் நண்பர் உள்ளிட்டவர்களை தொடர்ந்து இன்று கேபியின் அம்மா வந்துள்ளார்.
இருந்தாலும் எல்லோருக்கும் ஷிவானியின் அம்மாவை தான் மிகவும் பிடித்துவிட்டது. ஷிவானியை கண்டித்த விதமும் , ஆரியை மதித்த விதமும் ஆடியன்ஸிற்கு மிகவும் பிடித்துவிட்டது. இன்னும் ஆரி குடும்பத்தினரை பார்க்க தான் எல்லோரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.