’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (14:32 IST)
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம். வரும் மார்ச் 29-ம் தேதி ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் மம்மூட்டி - நயன்தாராவை வைத்து இயக்கிய ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தை, தமிழில் ரீமேக் செய்துள்ளார் சித்திக். ரமேஷ் கண்ணா இந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருப்பதோடு, முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
 
இந்தப் படத்தை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்திருந்தனர். ஆனால், சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’படம் ரிலீஸானதால் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’திரைப்படம் ரிலீஸாகவில்லை. 
 
இந்நிலையில் வரும் மார்ச் 29-ம் தேதி ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்படம் ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்