தமிழ்ப்படம்2.0 சிங்கிள் டிராக்; இதுவும் ஸ்பூஃப் பாடலா?

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (13:48 IST)
மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்ப்படம்2.0 படத்தின் ரொமாண்டிக் சிங்கிள் நாளை வெளியிடப்பட உள்ளது.

 
தமிழ்ப்படம் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் தமிழ்ப்படம்2.0 என்ற பெயரில் உருவாகி வருகிறது. மிர்ச்சி’ சிவா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாக உள்ளது என்றும் படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். எல்லா திரைப்படங்கள் மற்றும் படத்தின் காட்சிகளை கேலி செய்து உருவான படம்தான் தமிழ்ப்படம்.
 
அதேபோன்று இரண்டாம் பாகமும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் சிங்கிஸ் டிராக் நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. ரொமாண்டிக் சிங்கிள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பாடல் எல்லா ரொமாண்டிக் பாடல்களின் குவியலாக இருக்குமோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முதல் பாகத்தில் இடம்பெற்ற ரொமாண்டிக் பாடல் எல்லா படங்களின் வரிகளை கொண்டு அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஹாலிவுட்டில் எல்லா திரைப்படங்களையும் கேலி செய்து ஸ்பூஃப் படம் என்று சொல்லக்கூடிய படங்கள் வெளியாகும். அதேபோன்று இந்த தமிழ்ப்படமும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்