'கோலிசோடா 2' ரிலீஸ் தேதி அறிவிப்பு

செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (15:38 IST)
இயக்குனர் விஜய்மில்டன் இயக்கிய 'கோலிசோடா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுமார் ரூ.1 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.5 கோடி  வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'கோலி சோடா 2' படத்தை இயக்குனர் விஜய்மில்டன் கடந்த சில மாதங்களாக இயக்கி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் செம்பன், ரோஹினி, சுபிக்சா உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இயக்குனர் கவுதம்மேனனும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். அச்சுராஜாமணி இசையில், தீபக் படத்தொகுப்பில், உருவாகியுள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்