விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியுமா?

வியாழன், 25 ஜனவரி 2018 (22:06 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘காளி’ படத்தின் ரிலீஸ் தேதி தெரியவந்துள்ளது. ‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் ‘காளி’. 
 
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.
 
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் இருந்து ஒரு பாடல் இன்று ரிலீஸாகிறது. பாடலுடன் சேர்த்து படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க உள்ளனர். மார்ச் 30ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்