ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய ஆறு டிப்ஸ்களை இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக மொத்த உலகமும் வீட்டில் முடங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியினர் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய 6 டிப்ஸ்களை இசையமைப்பாளர் ரஹ்மான் தனது சமீபத்தைய இன்ஸ்டாகிராம் நேர்காணலில் கூறியுள்ளார்.
வீட்டில் இருந்தபடியே வேலை செய்தாலும் அலுவலகத்துக்கு சென்றால் என்ன மாதிரியான உடைகளை அணிவீர்களோ அதையே அணியுங்கள்
வேலை நேரத்தின் மொபைல் போன் உள்ளிட்டவற்றை ஆஃப் செய்துவிடுங்கள்.
வேலை நேரம் முடிந்தவுடன் குடும்பத்தினருடன் பேசுங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களை வேலை நேரத்தில் தொந்தரவு செய்யமாட்டார்கள்.
பணிபுரியும் இடத்தை எப்போதும் கோவில் போல சுத்தமாகப் பணிபுரியுங்கள்.
நாம் என்னதான் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தினாலும், நமது அறிவு என்பது எல்லையற்ற சக்தி ஒன்றிலிருந்து கிடைக்கிறது. அதனால் கடவுள் மதம் போன்ற விஷயங்களை வைத்து சண்டை போடுவது துரதிர்ஷ்டவசமானது.