சூர்யா & அமீரை அடுத்து வாடிவாசல் படத்தில் இணையும் பிரபல கதாநாயகி!

vinoth
வியாழன், 25 ஜனவரி 2024 (11:08 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது வாடிவாசல் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ரியா வெற்றிமாறன் இயக்கத்தில் ஏற்கனவே வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்