விஷால் நடிக்கும் ரத்னம் பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! அஜித்தின் விடாமுயற்சி படத்தோடு மோதலா?

vinoth

வியாழன், 25 ஜனவரி 2024 (10:50 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி தற்போது விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்த படத்தை குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் அடுத்தடுத்து நடந்து வந்தது. படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ’ரத்னம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர் படக்குழுவினர். அதே தேதியில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படமும் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்