சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:52 IST)
நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களுக்குப் பிறகு 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய  கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காததால் ஒரு தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து உடனடியாக ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் படத்தின் ஹீரோயினை இன்னும் தேர்வு செய்யவில்லையாம். இப்போதைக்கு சாண்டி மாஸ்டர் இடம்பெறும் பாடல் காட்சிகளை இயக்குனர் அல்போன்ஸ் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்