அல்போன்ஸ் வெளியிட்டது நக்கல் பதிவா?... உடனே நீக்கம்!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (07:11 IST)
நேரம், பிரேமம் மற்றும் கோல்ட்  ஆகிய படங்களுக்கு அடுத்து அல்போன்ஸ் புத்ரன் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களாக தொடங்கி நடந்து வரும் நிலையில் இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்ப்ட்டுள்ளது. படத்துக்கு கிஃப்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் இளையராஜா இசையில் 7 பாடல்கள் இடம்பெறும் என போஸ்டரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் அல்போன்ஸ்  வெளியிட்ட பதிவில் “எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதால் திரையரங்குகளுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொள்ள போகிறேன். நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாடல் வீடியோக்கள், குறும்படங்கள், ஏதேனும் வெப் தொடர்கள் இயக்க முயற்சி செய்வேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த பதிவை அவர் உடனடியாக நீக்கியுள்ளார். இதன் மூலம் நக்கலாகதான் அவர் இந்த பதிவை வெளியிட்டுருப்பார் என்று ரசிகர்கள் நினைக்க தொடங்கியுள்ளனர். விரைவில் இது சம்மந்தமாக அல்போன்ஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்