பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 2. இவர்கள் கூட்டணியில் வெளியாகி ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகிறது. கடந்த 2019லேயே இதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா, படப்பிடிப்பு தள விபத்து போன்றவற்றால் நின்று போனது.
இந்நிலையில் தற்போது இந்தியன் 2 அப்டேட் குறித்த போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. நாளை காலை 11 மணிக்கு இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் சேனாபதி (கமல்ஹாசனின் கதாப்பாத்திரம்) கையெழுத்தும் உள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.