லவ்வர்ஸை அத்துவிட ஆண்டவர் போட்ட ப்ளான்? BiggBoss-ல் இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்!

ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (12:24 IST)
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இரண்டு எலிமிநேஷன் இருக்கிறது என்று சொல்லி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரின் ஏழாவது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்த வாரம் எலிமினேஷன் இருப்பதோடு வைல்ட் கார்ட் முறையில் ஐந்து பேர் புதிதாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவும் உள்ளார்கள். இந்த ஐந்து பேர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் யார் என்ற கேள்வியும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் ப்ரோமோவில் எலிமிநேஷன் ஒருவர் அல்ல இருவர் என்று அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டில் ரவீனா - மணி காதல் கதை அனைவரும் அறிந்தது. அவர்கள் கேம் விளையாடுவதை விட அவர்கள் பேசிக் கொண்டிருப்பதற்கு அதிக நேரம் ஒதுக்குவதாக ஹவுஸ் மேட்ஸ் அடிக்கடி சொல்லி வந்தனர்.

இந்நிலையில் விளையாட்டு சுவாரஸ்யமாக்க இந்த வார எலிமினேஷனில் மணி வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. ரவீனா நன்றாக கேம் விளையாடினாலும் மணியால் அவரது ஆட்டம் பாதிப்பதாக பலரும் சொல்லி வந்தனர். மற்றொரு எலிமினேஷனாக விசித்ரா வெளியேற வாய்ப்பு இருக்கலாம் என்று பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்