கமல் –மணிரத்னம் படத்தில் இணைந்த குஷ்புவின் மகள்!

சனி, 28 அக்டோபர் 2023 (07:57 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பெரிதாக வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்த படத்தில் முதல் முதலாக கமல்ஹாசனுடன் இணைந்து நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த குஷ்பு சுந்தர் சி தம்பதியினரின் இளைய மகள் அனந்திதாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பூஜையில் அவர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்