அதன் பின்னர் அருண் விஜய்யைக் கதாநாயகனாக்கி வணங்கான் படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரிக்க படம் பொங்கலை முன்னிட்டு இன்று ரிலீசாகிறது.
இந்நிலையில் படம் சம்மந்தமாகப் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசிய நடிகர் அருண் விஜய் “விடாமுயற்சி படமும் பொங்கலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்ட போது நான் இயக்குனர் மகிழுக்கு போன் செய்து வாழ்த்தினேன். அதை யாருமே போட்டியாகப் பார்க்கவில்லை. எங்களுக்கும் ஒரு சிறிய அளவில் தியேட்டர்கள் கிடைத்தன. ஆனால் விடாமுயற்சி இப்போது ரிலீஸ் ஆகவில்லை என்பது எனக்கும் வருத்தம்தான். ஆனால் சீக்கிரமே அந்த படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெறும்” எனக் கூறியுள்ளார்.