விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாதா?.. தீயாய் பரவும் தகவல்!

vinoth
வெள்ளி, 5 ஜூலை 2024 (07:49 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி மீண்டும் அஸர்பைஜானில் தொடங்கியது.

அங்கு அஜித், திரிஷா மற்றும் அர்ஜுன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளார் மகிழ் திருமேனி. அஜித் தற்போது சென்னைக்குத் திரும்பியுள்ள நிலையில் அங்கு மற்றவர்களை வைத்து இயக்குனர் மகிழ் திருமேனி மற்ற நடிகர்களை வைத்து வேறு சில காட்சிகளைப் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்ட விடாமுயற்சி, அந்த தேதியில் இருந்து பின்வாங்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் லைகா நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படமான வேட்டையன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்