படங்களை தொடர்ந்து சீரிஸ்களும் ரீமேக்… வரிசையாகக் களமிறங்கும் பாலிவுட்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:18 IST)
இங்கிலாந்து நாட்டின் துப்பறியும் வெப் சீரிஸான லூதர் சீரிஸ் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது.

ஒரு மொழியில் வெளியாகும் படங்களை வேறு மொழிகளில் ரீமேக் செய்யும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் ஓடிடி தளங்களில் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் கிடைக்கும் வெப் சீரிஸ்கள் கூட இப்போது ரீமேக் செய்யப்படுகின்றன. ஏற்கனவே ஷாருக் கான் மணி ஹெய்ஸ்ட் சீரிஸ் உரிமையை வாங்கி வைத்துள்ளார். இந்நிலையில் இப்போது பிரிட்டனில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற லூதர் என்ற க்ரைம் த்ரில்லர் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்