தமிழ் சினிமாவில் மென்மையானக் கதைக்களங்களைத் தொடர்ந்து படமாக்கி வருபவர் சீனு ராமசாமி. அவர் இயக்கிய தர்மதுரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாலும் மற்ற படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.