ஷங்கரின் ரீமேக் படத்திற்கு வந்த சிக்கல் ! தயாரிப்பாளர் நோட்டீஸ்

வியாழன், 15 ஏப்ரல் 2021 (20:04 IST)
இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று பெயரெடுத்தவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்துப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இவர் கடைசியாக ரஜினியை வைத்து இயக்கிய படம் 2.0. இப்படத்தை அடுத்து ஷங்கர் கமல்ஹாசன் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தை இயக்கிவந்த நிலையில் எதிர்பாரத விதமாக ஏற்பட்ட விபத்தால் இப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

சமீபத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராம்சரண் நடிப்பில் ஷங்கர் ஒரு படம் இயக்குவதாக அறிவித்தார். இந்நிலையில், பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன்2 படத்தை ஷங்கர் ரீமேக் செய்யவுள்ளதாக இண்று அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் இதை ரீமேக் செய்ய தன்னிடம் முறையான அனுமதி பெற வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் பி ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், சுஜாதாவின் அந்தக் கதையை நான் முழுத்தொகை கொடுத்து வாங்கி வைத்துள்ளேன். ரீமேக் செய்ய வேண்டுமென்றால் என்னிடம் அனுமதி பெற வேண்டும். என் அனுமதி பெறாமல் எடுத்தால் சட்டப்படி குற்றமாகும். பாய்ஸ் படம் தோல்வி அடைந்தபோது அந்நியன் பட வாய்ப்பு கொடுத்து உங்கள் இமேஜை மீட்டு வந்தேன். இப்போது என்னை தவிர்த்துவிட்டு ரீமேக் செய்வது குற்றமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்