மஜாப்பா மஜப்பா... அந்நியன் இந்தி ரீமேக்கில் சூப்பர் ஹிட் நடிகை - யார் தெரியுமா?

திங்கள், 19 ஏப்ரல் 2021 (11:00 IST)
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து கடந்த 2005ம் ஆண்டு வெளியான படம் அந்நியன். இந்த திரைப்படம் தமிழில் மெகா ஹிட் அடித்தது. இன்றளவும் இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் புதிய படம் போன்று அமர்ந்து பார்ப்பவர்கள் உண்டு. 
 
இந்த திரைப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் பிரபல பாலிவுட் ஹீரோயின் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க வைக்க ஷங்கர் அணுகியுள்ளார். எனவே இந்த படத்தில் இரண்டு திறமை வாய்ந்த நடிகர், நடிகைகள் நடித்து இந்தி திரை ரசிகர்கள் அனைவரது மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நம்ப முடிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்