சூப்பர் டூப்பர் ஹிட்… டி ஆர் பி யில் எதிர் நீச்சல் சீரியல் படைத்த சாதனை!

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:10 IST)
நடிகை கனிகா தமிழில் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். ஒரு கட்டத்தில் அவர் தனக்கான வாய்ப்புகளை இழந்த நிலையில் ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இப்போது இவர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரோடு குணசேகரன், மதுமிதா, ஹரிப்ரியா, கமலேஷ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் படு பயங்கரமான ஹிட் அடித்துள்ளது. தொலைக்காட்சிக்கு வெளியேயும் இந்த சீரியல் ரசிகர்களைக் கவர்ந்து முகநூல், இன்ஸ்டாகிராமில் எல்லாம் துணுக்குகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதற்கு இந்த சீரியலில் ஆணாக்கவாதியான குணசேகரனுக்கும்(மாரிமுத்து), அவரது குடும்பத்து பெண்களுக்கு இடையே நடக்கும் மோதல் போராட்டமே காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த சீரியல் இப்போது டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டுள்ளது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்