முட்டாள்தனமாகப் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என நினைப்பவர்களைப் பார்த்தால் அருவருப்பாக உள்ளது –நானி ஆவேசம்!

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (09:25 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அது சம்மந்தமான பரபரப்புகள் இப்போதுதான் சற்றுத் தணிந்துள்ள நிலையில் இப்போது ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் கொண்டா சுரேகா சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் கே டி ராமாராவ் இருந்தார் எனப் பேசி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இது சம்மந்தமாக கண்டனத்தைப் பதிவு செய்த சமந்தா “என்னுடைய விவாகரத்து என்பது தனிப்பட்ட விஷயம். பரஸ்பர சம்மதத்துடன்தான் எங்கள் மணவாழ்க்கை முடிவுக்கு  வந்தது.  அதில் எந்த அரசியல் தலையீடுகளும் இல்லை. என்னுடைய பெயரை உங்கள் அரசியல் சண்டைகளில் பயன்படுத்த வேண்டாம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் நானி சமந்தாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “என்ன வேண்டுமானாலும் முட்டாள்தனமாகப் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் அருவருப்பாக உள்ளது. பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் ஊடகங்களுக்கு முன்னர் அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவது தவறானது.  இந்த மோசமான செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்