கோஹ்லிக்கு அடுத்து பாகிஸ்தானில் ஒரு ரன் மெஷின்

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (17:44 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை தொடர்ந்து பாகீஸ்தான் அணியின் இளம் பேட்ஸ்மேன் பகர் ஜமான் ரன் மெஷினாக உருவாகி வருகிறார்.

 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தொடர்ந்து இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் விரைவில் கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சினின் சாதனைகளையும் எளிதில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோஹ்லி தற்போது எல்லோடும் ரன் மெஷின் என்று அழைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் பேட்ஸ்மேன் பகர் ஜமான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். இதன்மூலம் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
 
மேலும் குறைந்த ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்து பல்வேறு முன்னணி பேட்ஸ்மேன்களின் சாதனைகளை முறியடித்துள்ளார். 17 ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார்.
 
தற்போது இவர் ஒவ்வொரு போட்டியில் கோஹ்லி போல் சாதனை படைக்க தொடங்கியுள்ளார். தொடர்ந்து பகர் ஜமான் இதேபொன்று சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி வந்தால் அடுத்த ரன் மெஷின் இவர்தான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்