நவாஸ் ஷரீப் மேல்முறையீடு: நீதிமன்றத்தில் இன்று விசாரணை

செவ்வாய், 17 ஜூலை 2018 (11:47 IST)
ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், அவரது மகள், மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷரிப் மீதும், அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்டதால்  பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப்பை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீக்கியது. 
 
அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நவாஸ் ஷரிப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் அவரது மகள் மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மாருமகன் மரியம் நவாஸுக்கு ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  நவாஸ் மற்றும் அவரது மகளை  போலீஸார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்து ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
தங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, மூன்று பேரின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
 
இந்நிலையில் நவாஸ் ஷரீப், மரியம் உள்பட 3 பேர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்