மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

vinoth

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (09:31 IST)
ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பெற்ற அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். அந்த அணி இதுவரை 5 முறைக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அந்த அணியில் கேப்டன் பொறுப்பு ரோஹித்திடம் இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்குக் கைமாற்றப்பட்டது. அது முதல் அந்த அணியில் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு அந்த அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் தோற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அந்த அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா இல்லாதது பின்னடைவாக அமைந்தது.

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் அவர் இன்னும் ஓரிரு நாட்களில் மும்பை அணியோடு இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மும்பை ரசிகர்களுக்கு ஆறுதலான ஒரு தகவலாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்