ஃபாகர் ஜமான் இரட்டை சதம்: 244 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

சனி, 21 ஜூலை 2018 (08:04 IST)
பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாவே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வரும் நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி புலுவாயோ நகரில் நடைபெற்றது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான இமாம் உல் ஹக் மற்றும் ஃபாகர் ஜமான் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடினர். ஃபாகர் ஜமான் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் 156 பந்துகளில் 210 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்ல் இமாம் உல் ஹக் 113 ரன்களும், ஆசிப் அலி 50 ரன்களும் எடுத்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 399 ரன்கள் குவித்தது.
 
400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி ஜிம்பாவே அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அந்த அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஃபாகர் ஜமான் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
 
இந்த வெற்றியின் மூலம் இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று 4-0 என்ற நிலையில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்