நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சி எஸ் கே அணி விளையாடியது. போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 183 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய சி எஸ் கே அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்ததால் தடுமாற்றத்தோடு விளையாடியது. சென்னை அணியின் ஐகான் தோனி, 11 ஆவது ஓவரிலேயே களமிறங்கினாலும் அவர் ஆடிய நிதான ஆட்டத்தால் சென்னை அணியால் வெற்றிப் பெற முடியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக சி எஸ் கே அணி ரசிகர்களைப் பொறுத்தவரை அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தோனி கடைசியாக ஒரு சிக்ஸர் அடித்து விட்டால் பைசா வசூல் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் இந்த சீசனில் தோனிதான் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு ஆதங்கத்தில் உள்ளனர். இதனால் தொடரின் நடுவிலேயே தோனி ஒய்வை அறிவிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவியுள்ளன.