எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

vinoth

ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (08:42 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்பிருந்தும் தோல்வியை தழுவியது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியாகும். முதல் போட்டியை வெற்றிகரமாக முடித்த சிஎஸ்கே அதன் பின்னர் மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் எல்லாப் போட்டிகளையும் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் சி எஸ் கே கோட்டை விட்டது என்பதுதான்.

இந்நிலையில் சென்னை அணிக் கேப்டன் ருத்துராஜ் இந்த தோல்விகள் குறித்துப் பேசியுள்ளார். அதில் “ கடைசி 3 போட்டிகளும் நாங்கள் நினைத்தது போல எதுவும் அமையவில்லை.  பவர்ப்ளே ஓவர்களில் கோட்டை விடுகிறோம். பவுலிங்காக இருந்தால் 20 ரன்கள் அதிகமாகக் கொடுக்கிறோம். பேட் செய்தால் விக்கெட்களை சீக்கிரமாக இழக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்