14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச டென்னிஸ்! – ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (10:43 IST)
சென்னையில் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நீண்ட காலம் கழித்து மீண்டும் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. அதற்கு பிறகு கடந்த 14 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகள் எதுவும் சென்னையில் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டில் மீண்டும் சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12 முதல் 18 வரை நடைபெற உள்ள இந்த தொடரில் உலக நாடுகளை சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளன. ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீராங்கணைக்கு ரூ.26 லட்சம் பரிசுடன், 280 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்