இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டவர்களிடம் இருந்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு போதுமான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் வேண்டுமென்றே போட்டிகளில் சொதப்புகிறார்கள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் இருந்தே அணிக்குள் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது.