இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்து போட்டிகளில் தோற்று புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் ருத்துராஜ் அரை சதத்துக்கு மேல் அடித்திருந்தும் ஏன் அவரை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தும் ஏன் ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம் என்பது குறித்து ருத்துராஜ் பேசியுள்ளார். அதில் “கான்வே மிகச்சிறந்த வீரர்தான். ஆனால் அவர் தொடக்க ஆட்டக்காரர். ஆனால் ஜடேஜாவின் பாத்திரம் வேறு விதமானது. அவர் சிறந்த பினிஷர். கான்வே இறுதிகட்டத்தில் சற்று சிரமப்பட்டார். அதனால்தான் அவரை வெளியேற்றினோம். அங்கே ஜடேஜா தேவைப்பட்டதால் அவரை அனுப்பினோம்” எனக் கூறியுள்ளார்.