சென்னையில் இரவு முழுவதும் கொட்டிய மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
வெள்ளி, 1 ஜூலை 2022 (07:40 IST)
சென்னையில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது அடுத்து சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் அதிக வெப்பநிலையில் தவித்த பொதுமக்கள் அவ்வப்போது குளிர்ச்சியான தட்ப வெப்பநிலையை அனுபவித்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை மாறி உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்னையில் மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையத்தின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இனி தொடர்ச்சியாக மழையை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.