தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

Prasanth Karthick

புதன், 9 ஏப்ரல் 2025 (09:09 IST)

நேற்றைய போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களே அணியை விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த ஐபிஎல் சீசன் தொடங்கி, முதல் மேட்ச்சில் மட்டும் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பிறகு தோல்வியை மட்டுமே தொடர்ந்து சந்தித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற PBKS vs CSK போட்டியிலும், பந்துவீச்சில் பஞ்சாப்பை கட்டுப்படுத்த முடியாமல் நிறைய ரன்களை வாரி வழங்கிவிட்டு, பின்னர் சேஸ் செய்ய முடியாமல் சென்னை வீரர்கள் தடுமாறினர்.

 

தொடர்ந்து சென்னை அணி தோல்வியை தழுவுவது சரியான டீம் ஃபார்மேஷன் இல்லாதது, புதிய வீரர்களை உள்ளே கொண்டு வராதது உள்ளிட்ட பல காரணங்களால்தான் என ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறாக ஒரு ரசிகர் பேசும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

 

அதில் அவர் “சுற்றி நின்று ஊரே பார்க்கன்னு பாட்டு போட்டுட்டு வரதுக்கு எல்லாம் 2 பாயிண்ட்ஸ் குடுக்க மாட்டாங்க ப்ரோ. கூஸ்பம்ப்ஸ் வேணும்னா பாகுபலி மாதிரி படத்தை போய் பாருங்க. அடிச்சு ஜெயிச்சாதான் இங்க பாயிண்ட்ஸ். தோனி முன்னாடி இறங்கியிருந்தா கழட்டு கழட்டுனு கழட்டுவாருன்னு சொன்னீங்க. அவரு க்ளவுஸை மட்டும்தான் கழட்டுனாறு. இளைஞர்களுக்கு வாய்பு தரலாம்

 

அந்த டீம்ல ரஸீத் ன்னு ஒரு பையன் இருக்கான். அருமையா விளையாடுவான். அவனுக்கு ஒரு 2 மேட்ச்ல வாய்ப்பு குடுங்க. அவர் ஒரு 30 ரன் கூட அடிக்கலைன்னா என் வீட்டை எழுதி குடுத்துடுறேன். இதை ருதுராஜ்க்கு யாராவது தெரியப்படுத்துங்க” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்