தன் சாதனையை தானே முறியடித்த நீரஜ் சோப்ரா! – வெள்ளி பதக்கம் வென்று சாதனை!

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2022 (08:48 IST)
பிரபல ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா சமீபத்தில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவின் பிரபலமான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. இவர் தற்போது ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.

அதில் ஈட்டி எறிதலில் புதிய சாதனையாக 89.94 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய அளவில் அதிக தொலைவு ஈட்டி எறிந்த வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றிருந்தார். முன்னதாக இந்திய வீரர்களில் அதிக தூரம் (89.30 மீட்டர்) ஈட்டி எறிந்தவராக இருந்த நீரஜ் சோப்ரா தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்