சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை காட்டிலும் என்னிடம் அதிகமாக பணம் உண்டு என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிண்டலாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், சோயப் அக்தருக்கு பணம் தேவை என்பதால் இந்தியாவை புகழ்ந்து பேசுகிறார் என தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட சோயப் அக்தர், நண்பர் சேவாக்கின் தலைமுடியை ( முடி கொட்டியுள்ளது ) காட்டிலும் என்னிடம் அதிகம் பணம் உண்டு எனவும், இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.