சிக்ஸ் அடிக்க முடியும் என நம்பினேன் – தினேஷ் கார்த்திக் வருத்தம் !

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (11:09 IST)
நியுசிலாந்துக்கு எதிரான 3 ஆவது டி 20 போட்டியில் இந்திய அணித் தோல்விக்கு தினேஷ் கார்த்திக்கின் ஒரு முடிவும் காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அதற்கு தினேஷ் கார்த்திக் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான கடைசி டி 20 போட்டியை இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. 213 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணியில் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் மற்றும் குருனால் பாண்ட்யா ஆகிய இரு பேட்ஸ்மேன்கள் இருந்தும் வெற்றிக்குத் தேவையான 16 ரன்களை அடிக்க முடியாமல் இந்தியா தோவியடைந்தது.

கடைசி ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் 2 ரன்கள் எடுத்தார் . அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை.  மூன்றாவது பந்தை அடித்து ஆடினார் தினேஷ். அப்போது க்ருனால் பண்டியா பாதி தூரம் ஓடி வந்தார். ஆனால், தினேஷ் ரன் வேண்டாம் என மறுத்து விட்டார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார், ஆனால், அதற்கு முன்பே இந்தியா வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு தினேஷ் கார்த்திக் அந்த ஒரு ரன் ஓட மறுத்தது தான் காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது. தினேஷ் கார்த்திக் அந்த ஒரு ரன் ஓடாமல் மறுத்ததும் இந்தியாவின் தோல்விக்கு முக்கியக் காரணம் என முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டினர்.

அதையடுத்து இப்போது தனது அந்த முடிவுக் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். ’ஒரு ரன் ஓடுவதற்கு மறுப்பு தெரிவித்த அந்த சூழ்நிலையில் என்னால் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிப்பெற செய்ய முடியும் என்று நம்பினேன். ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக என் திறமை மீது நம்பிக்கை எனக்கு நம்பிக்கை இருந்தது. குருனால் பாண்ட்யா சிறப்பாக விளையாடினார். ஆனால் என்னால் எதிர்முனைக்கு ஓட முடியாமல் போய்விட்டது. சில தினங்களில் இது போன்ற சூழ்நிலைகள் ஏற்படுவது இயல்புதான். சவுத்தீ சிறப்பாக பந்து வீசினார். அவர் சிறிய தவறொன்றை செய்திருந்தாலும் அவரை எங்களால் வீழ்த்தியிருக்க முடியும். நாங்கள் இருவரும் முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்