இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்துள்ளது. ஐதராபாத் அணி பேட்ஸ்மேன் இஷான் கிஷான் பேட் செய்யும் போது தீபக் சஹார் வீசிய பந்தை பின்பக்கமாக தட்டிவிட நினைத்தார். ஆனால் பந்து கீப்பர் வசம் சென்று தஞ்சமடைந்தது. இந்த பந்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் யாருமே விக்கெட்டுக்கு அப்பீல் செய்யாத போதும் இஷான் கிஷான் தானாகவே களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் குழம்பிய நடுவர் பின்னர் அவர் செல்வதைப் பார்த்து அவுட் என அறிவித்தார். ஆனால் பின்னலையில் பந்து அவர் பேட்டில் படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இதன் காரணமாக இஷான் கிஷான் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.