சின்ன தவறால் இந்தியா தோல்வி! திட்டு வாங்கும் தினேஷ் கார்த்திக்

திங்கள், 11 பிப்ரவரி 2019 (12:20 IST)
இந்தியா - நியூசிலாந்து இடையே ஆன மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


 
இந்த தோல்விக்கு தினேஷ் கார்த்திக் செய்த ஒரு சிறிய தவறு  என பொரிந்து தள்ளுகிறார்  சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
 
3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி  212 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணியில் தவான், தோனி தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 
 
கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை யில் தினேஷ் கார்த்திக் அந்த ஓவரின்  முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் . அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை.  மூன்றாவது பந்தை அடித்து ஆடினார் தினேஷ். அப்போது க்ருனால் பண்டியா பாதி தூரம் ஓடி வந்தார். ஆனால், தினேஷ் ரன் வேண்டாம் என மறுத்து விட்டார். 
 
இதையடுத்து தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார், ஆனால், அதற்கு முன்பே இந்தியா வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு தினேஷ் கார்த்திக் அந்த ஒரு ரன் ஓட மறுத்தது தான் காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது. 
 
இது பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். "தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடினார். ஆனால், சிறு தவறுகள், டி20 களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். எதிர் பக்கம் க்ருனால் பண்டியா இருக்கும் போது அந்த ஒரு ரன் ஓடாதது தவறு" என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்