இதையடுத்து பேட் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த இலக்கை 16 ஆவது ஓவரிலேயே எட்டியது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 46 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்த சீசனின் தொடக்கத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து நான்கு வெற்றிகளைப் பெற்று தற்போது மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஐந்தில் வெற்றியும் நான்கில் தோல்வியும் பெற்று 10 புள்ளிகளையும், நல்ல ரன்ரேட்டையும் பெற்றுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புப் பிரகாசமாகியுள்ளது.